NEWS2

15/06/2012 12:51

 

 

 

செய்தி Share
சட்டவிரோத இலங்கையர் குழுவொன்று நாட்டுக்குள் வருவதை கனடா தடுத்துள்ளது: கனேடிய இணையத்தளம்
[ வெள்ளிக்கிழமை, 15 யூன் 2012, 01:34.01 AM GMT ]
தமது நாட்டில் சட்டவிரோதமாக அடைக்கலம் கோரவிருந்த மற்றும் ஒரு இலங்கையர் குழுவினர், கனடாவுக்குள் வருவதை கனடா தடுத்துள்ளதாக கனேடிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

148 பேரைக்கொண்ட இந்த இலங்கையர்கள் கனடாவுக்கு செல்லும் வழியில் அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான பெனினில் வைத்து நாட்டில் கைதுசெய்யப்பட்டனர்.

ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என்று அனைவரும் உள்ளடங்கியிருந்த இந்த இலங்கையர்கள் நேற்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில் இவர்களை பெனின் நாட்டில் வைத்து கைதுசெய்ய கனடாவின் புலனாய்வுப்பிரிவினரே முக்கிய பங்கை வகித்ததாக, அந்த நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 492 மற்றும் 76 என்ற தொகையின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்கள் கனடாவில் அடைக்கலம் கோரியுள்ளனர்.

இவர்களின் விடயங்களை மிகவும் கவனமாக கையாண்டு வருகின்ற நிலையிலேயே பெனினில் வைத்து 148 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் அவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பியதன் மூலம் தமது நாட்டுக்கு அவர்களை வருவதை கனடா தடுத்துள்ளதாக கனேடிய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.